சிம்புவின் டண்டனக்கா ஜோடி வரலட்சுமி!

By Staff

Varalakshmi with Sarathkumar
'திரு போடா திருமதி போடி-டண்டனக்கா ஜோடி' (படத்தோட பேரே இதாங்க...!) படத்தில் சரத்குமாரின் மகள் வரலட்சுமி கதாநாயகியாக நடிப்பது உறுதியாகிவிட்டது.

இது குறித்த ஒப்பந்தத்தில் தந்தை சரத் குமாரின் பிறந்த நாளான நேற்று வரலட்சுமி கையெழுத்திட்டு தன் முதல் சம்பளத்தைப் பெற்றுள்ளார்.

விக்னேஷ் சிவா இயக்கும் இந்தப் படத்தை ஜெமின் பிலிம் சர்க்யூட் நிறுவனமும் ஷான்யா டெலிபிலிம்ஸும் தயாரிக்கின்றன.

இந்தப் படத்தில் வரலட்சுமிதான் கதாநாயகி என்று வந்த செய்திகளை முதலில் மறுத்தாலும், இப்போது உண்மையை ஒப்புக் கொண்டுள்ளனர். படத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி, சம்பளத் தொகையும் முழுமையாக கொடுக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது (நடிகர் சங்கத் தலைவர் மகள் என்பதாலா!).

அதே நேரம் ஒரு நடிகரின் மகள் என்பதால் மட்டுமே அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துவிடவில்லை என்றும் சொல்கிரார்கள். எம்பிஏ பட்டதாரியான வரலட்சுமி, எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் பிஎச்டியும் முடித்திருக்கிறாராம்.

இதைத் தவிர அனுபம் கெரின் நடிப்புப் பட்டறையில் ஓராண்டு பயிற்சியும் முடித்துள்ளார். சல்சா நடனத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றவரும்கூட.

திரு போடா திருமதி போடி படத்தின் கதையைக் கேட்டதும் மிகவும் இம்ப்ரஸாகிவிட்ட சரத்குமார், தன் மகள் நடிப்புத் துறைக்குள் கால்பதிக்க இதுதான் சரியான தருணம் என முடிவு செய்து உடனே ஒப்புக் கொண்டாராம்.

இப்போதெல்லாம் அனைத்து திரைப்பட நிகழ்ச்சிகளிலும் வரலட்சுமியின் வருகை அதிகம் தெரிவதன் ரகசியம் இதுதானோ...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X