சிம்புவின் 'போடா போடி'-வரலட்சுமி விலகல்

By Staff

Varalakshmi
சிம்புவுடன் இணைந்து நடிப்பதாக இருந்த போடா போடி படத்திலிருந்து வரலட்சுமி சரத்குமார் விலகி விட்டார்.

சரத்குமார் - சாயா தம்பதியினரின் மூத்த மகள் வரலட்சுமி சரத்குமார். சமீபத்தில் மம்மா மியா நிகழ்ச்சி மூலம் அசத்தினார்.

சினிமாவிலும் வரலட்சுமி காலடி எடுத்து வைத்துள்ளார். சிம்புவுடன் இணைந்து போடா போடி படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

இந்த நிலையில் படத்திலிருந்து விலகி விட்டார் வரலட்சுமி. படத்தைத் தொடங்க காலதாமதாகி வருவதால் விலகல் முடிவை எடுத்துள்ளாராம் வரலட்சுமி.

சில மாதங்களுக்கு முன்பு படு கோலாகலமாக இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியானது. ஆனால் அத்தோடு சரி, வேறு எந்த வேலையும் நடப்பதாக தெரியவில்லை. இதனால் அப்செட் ஆகி விட்டாராம் வரலட்சுமி.

இதனால்தான் படத்துக்கு டாட்டா காட்டி விட்டார் வரலட்சுமி. இதையடுத்து சிம்பு வரலட்சுமியை நேரில் சந்தித்து சமாதானப்படுத்தினாராம். இருந்தாலும் தனது முடிவில் வரலட்சுமி உறுதியாக இருக்கிறாராம்.

போடா போடியிலிருந்து விலகி விட்ட வரலட்சுமி இப்போது பாடகியாக பரிமளிக்க முடிவு செய்து அதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X