ஷ்ரியாவின் கனவைக் கலைத்த நயன்?

தயாரிப்பாளர் மோகன் நடராஜன் தயாரிப்பில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் என வெற்றிக் கூட்டணியில் இந்த புதிய படம் உருவாகிறது. இதில் முதன்முறையாக விக்ரமுடன் நடிகை நயனதாரா ஜோடி சேர்ந்து நடிக்கிறார்.
கோலிவுட் இயக்குநர்களில் விரைவாக படங்களைத் தயாரித்து சூப்பர்ஹிட்டாகக் கொடுக்கும் இயக்குநர் என்ற நல்லபெயர் எடுத்துள்ள கே.எஸ்.ரவிக்குமார் (தசாவதாரம் விதிவிலக்கு!) இந்த படத்தை 45 நாள்களில் முடித்து தருவதாக தயாரிப்பாளரிடம் உறுதி அளித்துள்ளாராம்.
விக்ரம் இப்போது கந்தசாமி படத்தின் டப்பிங்வேலையில் மும்முரமாக உள்ளார். வரும் ஜூலை மாத நடுவில் அந்த வேலை முடிந்து விடும். இதைத் தொடர்ந்து இந்த புதிய படத்தில் நடிக்கத் தொடங்குவார் என்று தெரிகிறது. நகைச்சுவை கலந்த சிறந்த பொழுதுபோக்கு ஆக்ஷன் படமாக விக்ரமின் இந்த புதிய படம் அமையும் என்று தயாரிப்பு வட்டாரம் தெரிவிக்கிறது.
இன்னமும் பெயரிடப்படாத இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் ஜரூராக நடந்து வருகின்றன. ஆரம்பத்தில் இப்படத்தில் விக்ரமின் கந்தசாமி நாயகியான ஷ்ரியாவை நாயகியாகப் போட முடிவு செய்திருந்தனர். ஆனால் பின்னர் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டு இப்போது நயன்தாராவை நாடியுள்ளனர். ஆனால் இந்த படத்தில் நடிக்க கால்ஷீட் தருவது பற்றி நயனதாரா இதுவரை வாய் திறக்கவில்லை. காரணம் தொடர்ந்து 40 நாள்கள் மொத்தமாக தேதிகளைக் கேட்பதால் கொஞ்சம் தயங்குகிறாராம் நயன்.
கால்ஷீட் முன்னே பின்னே இருந்தாலும் பாரவாயில்லை, நயனின் சம்மதத்தை வாங்கிடுங்க சீக்கிரம் என இயக்குநரும், ஹீரோவும் இப்போது கூறிவிட்டதால் அட்வான்சுடன் நயனின் மேனேஜர் அஜீத்தைத் துரத்திக் கொண்டிருக்கிறார் மோகன் நடராஜன்.
ஒரு குத்தாட்டத்தால் இன்னும் எத்தனை வாய்ப்புகளை இழக்கப் போகிறாரோ ஷ்ரியா...


Click it and Unblock the Notifications











