'மோதி விளையாட' வரும் தனுஸ்ரீ தத்தா!

காதல் மன்னன் படத்துக்குப் பிறகு தொடர்ந்து அமர்க்களம், ஜெமினி என வெற்றிப் படங்களாகக் கொடுத்து வந்த சரணுக்கு சொந்தப் படத் தயாரிப்பு ஆசையால் வந்தது கஷ்ட காலம். இவர் தயாரிப்பில் உருவான மூன்று படங்கள் தொடர் தோல்வியைத் தழுவியது. கூடவே, கமல்ஹாசனை வைத்து இவர் இயக்குவதாக இருந்த சொந்தப் பட வாய்ப்பும் பறிபோனது.
குடியிருந்த வீட்டை விற்று கடனை அடைத்த சரண், ஆறு மாதங்கள் எந்த விழாவுக்கும் போகாமல் தீவிரமாகச் சிந்தித்து ஒரு அழகான ஸ்கிரிப்டை உருவாக்கியிருக்கிறார். அதுதான் மோதி விளையாடு.
உன்னாலே உன்னாலே வினய் நாயகனாக நடிக்க தனுஸ்ரீ தத்தா அவரது ஜோடியாக நடிக்கிறார்.
சொட்டச் சொட்ட கவர்ச்சி, அதிர வைக்கும் ஆக்ஷன் என தனது பழைய ஸ்டைலிலேயே இந்தப் படத்தை உருவாக்குகிறாராம் சரண்.
வாங்க... மீண்டும் அமர்க்களம் பண்ணுங்க!


Click it and Unblock the Notifications











