ஜாக்கியுடன் நடிக்கலை- ஆசின்

எய்ட்ஸ் விழிப்புணர்வுப் படம் ஒன்றில் ஜாக்கி சானுடன் விரைவில் ஆசின் இணைந்து நடிப்பதாக நேற்று சில மலையாளப் பத்திரிகைகள் செய்தி வெளிட்டிருந்தன.
இதுகுறித்து மும்பையிலுக்கும் ஆசினிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு, ஜாக்கிசானுடன் நான் நடிக்கும் திட்டம் எதுவும் இல்லை. இது மீடியாக்களின் அதீதமான கற்பனை.
ஜாக்கிசானை தசாவதாரம் நிகழ்ச்சியில் பார்த்தேன். போட்டோ எடுத்துக் கொண்டேன். அவ்வளவுதான். மற்றபடி அவருடன் நான் பேசியது கூட இல்லை.
ஆனால் ஜாக்கிசானே என்னிடம் பேசி இந்தப் படத்தில் நடிக்கச் சொன்னதாகக் கூறுவது அபத்தமானது. இன்னொன்று இந்த மாதிரிப் படங்களிலெல்லாம் அவர் நடிப்பாரா என்பதே சந்தேகம்தான்..., என்கிறார் ஆசின்.
Comments


Click it and Unblock the Notifications