மறுபடியும் மலையாளத்தில் குஷ்பு

குஷ்பு மலையாளத்திலும் நிறைய நடித்துள்ளார். மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, கலாபவன் மணி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். இதில் மம்முட்டியுடன் 3 படங்களிலும், மோகன்லாலுடன் 2 படங்களிலும் நடித்துள்ளார்.
மோகன்லாலுடன் குஷ்பு இணைந்து நடித்த அங்கிள் பன் படம் அங்கு சூப்பர் ஹிட் ஆனது. இதுதான் மலையாளத்தில் குஷ்பு நடித்த முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல மம்முட்டியுடன் இணைந்து நடித்த படங்களும் சூப்பர் ஹிட் ஆனவையே. கடைசியாக மம்முட்டியுடன் கையொப்பு என்ற படத்தில் நடித்திருந்தார் குஷ்பு.
தற்போது மீண்டும் மம்முட்டிக்கு ஜோடியாக 'பிரான்சியேட்டன் அன்ட் எ செயிண்ட்' என்ற புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் குஷ்பு. திமுகவில் சேர்ந்த பின்னர் அவர் நடிக்கும் முதல் மலையாளப் படம் இது.
தற்போது படப்பிடிப்புக்காக குஷ்பு கேரளாவுக்குப் போயுள்ளாராம்.
தமிழைப் பொறுத்தவரை குஷ்பு கடைசியாக நடித்த படம் வில்லு. அதிலும் கூட ஒரு பாட்டுக்கு மட்டும் வந்து குத்தாட்டம் ஆடி விட்டுப் போனார். அதன்பிறகு புதிய படம் எதிலும் அவர் நடிப்பதாக தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











