சினேகாவின் நடனமே இல்லாமல் ஒரு படம்

எங்க காலத்தில் எல்லாம் எத்தனை பாட்டு இருக்கும் தெரியுமா ஒரு படத்தில் என்று இன்றும் கூட சொல்லும் பெரியவர்கள் நிறைய இருக்கிறார்கள். ஆனால் இன்றோ ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்பது போல அளவான பாடல்களை வைத்து அழகாக படம் எடுக்கிறார்கள்.
ஆனால் அவ்வப்போது சுத்தமாக வழித்தெடுத்த வழுக்கைத் தலை போல ஒரு பாடலும் இல்லாமலும் படங்கள் வருவதுண்டு. அப்படிப்பட்ட பட வரிசையில் லேட்டஸ்டாக சேருகிறது அஞ்சுகம்.
'க்யூட் ஸ்வீட்டி' சினேகா நாயகியாக நடிக்கும் படம்தான் இந்த அஞ்சுகம். இது தெலுங்கில் அமராவதி என்ற பெயரில் வெளியான படத்தின் ரீமேக்காகும். அமராவதியிலும் கூட சினேகாதான் நாயகி. இன்னொரு நாயகியாக பூமிகா நடித்திருந்தார்.
திரில்லிங்கான காதலைச் சொல்லும் படம்தான் அஞ்சுகம். இப்படத்தில் சினேகா சிரத்தையுடன் நடித்து வருகிறார். தெலுங்கில் செய்ததை விட தமிழில் பின்னி விட வேண்டும் என்ற நோக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
படத்திற்கு இசையமைத்திருப்பவர் சந்திரா. ஆனால் பாடல்களே கிடையாதாம். அதேபோல டான்ஸும் கிடையாது.
அடுத்த மாதத்தில் அஞ்சுகம் அனைவரையும் மகிழ்விக்க வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











