எஸ்எம்எஸ் மூலம் செக்ஸ் தொல்லை-கோர்ட்டில் சினேகா சாட்சியம்

கடந்த 2008ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த ராகவேந்திரா என்ற வாலிபர் மீது மத்திய குற்றப் பிரிவு போலீஸில் சினேகா ஒரு புகார் அளித்தார். அதில், ராகவேந்திரா தனக்கு எஸ்எம்.எஸ். மூலம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக கூறியிருந்தார்.
இதையடுத்து போலீஸார் ராகவேந்திராவைக் கைது செய்தனர். அவர் மீது சைதாப்பேட்டை 11வது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று மாஜிஸ்திரேட் ஸ்ரீராம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சினேகா, அவருடைய தந்தை ராஜாராம், தாயார் பத்மாவதி உள்ளிட்ட 6 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
சினேகா கூறுகையில்,
பெங்களூரை சேர்ந்த ராகவேந்திரா, எனக்கு செல்போனில் அடிக்கடி எஸ்.எம்.எஸ். மூலம் தொல்லை கொடுத்து வந்தார். அவர் என்னை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் தினமும் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவித்து என்னை தொல்லை படுத்தினார்.
இதனால் நான் மன உளைச்சல் அடைந்தேன். சினிமா படப்பிடிப்புக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து வழக்கை அக்டோபர் 8ம் தேதிக்கு மாஜிஸ்திரேட் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
சினேகா வருகையைத் தொடர்ந்து கோர்ட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.


Click it and Unblock the Notifications