தமன்னாவின் 'மார்க்கெட்' ரேட்!

By Sudha

Tamannah
எனக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. மார்க்கெட் நிலவரப்படி நான் சம்பளம் கேட்கிறேன். ரூ. 1 கோடி சம்பளம் கேட்பதும் கூட மார்க்கெட் நிலவரத்தை அடிப்படையாக வைத்துதான் என்று கூறியுள்ளார் 'சிக்' தேவதை தமன்னா.

தமிழ் சினிமா காட்டில் இப்போது தமன்னாவின் மழைதான் ஜோராக பெய்து வருகிறது. முன்பு அடை மழையாக பெய்தது. இப்போது அப்படி இல்லாவிட்டாலும் கூட மழையின் வேகம் குறையவில்லை.

இன்னும் தனக்குள்ள நல்ல மவுசைப் பயன்படுத்தி சம்பளத்தை சரியாக ஏற்றி வைத்து வசூலித்து வருகிறார் தமன்னா. அவரது இன்றைய சம்பளம் ரூ. 1 கோடியாம்.

இதெல்லாம் ஜாஸ்தியா இல்லையா தமன்னா என்று யாராவது கேட்டால்,

பொதுவாக படங்களின் பட்ஜெட் மார்க்கெட் மதிப்பை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது; அதே போன்று மார்க்கெட் மதிப்பை ‌வைத்தே தயாரிப்பாளர்கள் எனது சம்பளத்தையும் வழங்கட்டும்.

நான் அவர்களிடம் இருந்து அதிகத் தொகையை எதிர்பார்க்கவில்லை. நான் இதுவரை நடித்த அனைத்து படங்களிலுமே, எனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளேன். என்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதற்காகவே நான் எப்போதும் முயற்சி மேற்கொண்டு வருகிறேன் என்கிறார்.

ஒரு கோடிக்கு ஒரு பைசா கூட குறைத்துக் கொள்ள முடியாது என்றும் கறாராக கூறி வருகிறாராம் தமன்னா.

நடிகர், நடிகைகளின் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு திரையுலகில் சத்தம் கேட்டது. அவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X