நான் அதிக சம்பளம் கேட்பதாக வதந்தி பரப்புகிறார்கள்-தமன்னா

தமிழ் சினிமாவின் ஹாட் ஸ்டாராக திகழ்பவர் தமன்னா. கை நிறையப் படங்களுடன் தமிழ், தெலுங்கில் பிசியாக ஓடிக் கொண்டிருக்கும் முன்னணிக் குதிரை. இந்த நிலையில் தமன்னா 1 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் இதை மறுக்கிறார் தமன்னா. இதுகுறித்து அவர் கூறுகையில்,
தமிழில் கார்த்தியுடன் சிறுத்தை, தெலுங்கில் அல்லு அர்ஜுன், நாக சைதன்யா படங்கள் என 3 படங்களில் நடித்து வருகிறேன்.
அடுத்து தமிழில் தனுஷ் ஜோடியாக ஒரு படம், தெலுங்கில் ஜூனியர் என்.டிஆர், ராம் ஆகியோருடன் 2 படங்கள் உள்ளன. இவற்றின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை கால்ஷீட் இல்லை. ஆனால் சிலர் என்னிடம் வந்து கால்ஷீட் கேட்டனர். எனது நிலையைச் சொல்லி மறுத்து விட்டேன். இதனால் கோபமாகி நான் 1 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக வதந்தி பரப்பி வருகிறார்கள்.
கஷ்டப்பட்டுத்தான் இந்த நிலைக்கு நான் வந்துள்ளேன். அதைப் புரிந்து கொள்ளாமல் இப்படி வதந்தி பரப்புவது நியாயமா என்று விசனப்படுகிறார் தமன்னா.


Click it and Unblock the Notifications











