ஐஸ்வர்யாவுக்கு காய்ச்சல், தொண்டை வலி

இதுகுறித்து அமிதாப் பச்சன் பிளாக்கில் கூறுகையில், ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த நான்கு நாட்களாக கடும் காய்ச்சல் மற்றும் தொண்டையி்ல் ஏற்பட்ட புண்ணால் அவதிப்பட்டு வந்தார்.
இதை அறிந்து பலரும் நலம் விசாரித்தனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் நன்றி.
ஐஸ்வர்யாவுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டதால் கவலைப்பட்டோம். இருப்பினும், தற்போது தனக்கு ஏற்பட்ட பிரச்சினையிலிருந்து அவர் குணமாகி வருகிறார். இருந்தாலும் இன்னும் முழுமையாக நலமாகவில்லை. மெதுவாக சரியாகி வருகிறார். விரைவில் அவர் நலமடைந்து தனது பணிகளில் கவனம் செலுத்துவார் என்று கூறியுள்ளார் அமிதாப்.
இதேபோல ஐஸ்வர்யாவின் கணவரான அபிஷேக் பச்சனும் ட்வீட்டர் மூலம் விடுத்துள்ள செய்தியில், ஐஸ்வர்யா இப்போது மிக மிக நன்றாக இருக்கிறார். இருப்பினும் 100 சதவீதம் சரியாகவில்லை. விரைவில் நலமாகி விடுவார் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











