தந்தை மீது பானு 'பகீர்' புகார்!

By Staff

Bhanu
ஆபாசமாக நடிக்குமாறு கொடுமைப்படுத்தியது அப்பாதான்!-பானு

தன்னை சினிமாவில் ஆபாசமாக நடிக்கச் சொல்லி வற்புறுத்தியவர் அம்மா அல்ல, அப்பாதான் என நடிகை பானு புகார் கூறினார்.

தாமிரபரணி தமிழ் படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை பானு. ஏராளமான மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார்.

இவரது தந்தை கே.எம்.ஜார்ஜ், தனது மனைவி ஷாலி பணம், சொகுசு வாழ்க்கைக்காக தனது மகள் பானுவை ஆபாசமாக நடிக்க வைத்து வருவதாகவும், மனைவியிடமிருந்து தன்னையும் பானுவையும் எப்படிக் காப்பாற்றிக் கொள்வது என்று தெரியவில்லை என்றும் கண்ணீர் பேட்டி தந்தார்.

இந் நிலையில் பானு கொச்சியில் நிருபர்களைச் சந்தித்து, தன் தந்தை மீது அடுக்கடுக்காக பகீர் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

நிருபர்களிடம் கண்ணீர் மல்க அவர் கூறியதாவது:

என் தந்தை நல்ல மனிதர் அல்ல. நான் குழந்தையாக இருக்கும்போதே என்னையும், அக்காவையும், என் தாயையும் தவிக்கவிட்டு ஓடிப் போனவர் அவர். என் தாய் மாமாதான் எங்களை கஷ்டத்திலிருந்து மீட்டார். ஓடிப்போன எனது தந்தை எங்களை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

நான் 8ம் வகுப்பில் படிக்கும் போதுதான் அவரைக் கண்டுபிடித்து திரும்ப அழைத்து வந்தோம். அதுதான் இப்போது தவறாகி விட்டது. நான் இதுவரை சம்பாதித்த பணம் எல்லாவற்றையும் எனது தந்தை எடுத்துச் சென்று விட்டார். என்னையும் எனது தாயையும் அவர் எவ்வளவோ கொடுமைப்படுத்தி விட்டார்.

ஒரு மகளைப் பற்றி பேசக் கூடாத வார்த்தைகளை அவர் பேசுகிறார். இதனால் எங்கள் குடும்பத்துக்குதான் பெருத்த அவமானம். என்னால் வெளியே தலைகாட்ட முடியவில்லை. இப்படிச் செய்வதுதான் அவரது நோக்கம்.

அவருக்கு எதிராக நாங்கள் வழக்கு தொடர்ந்தது உண்மைதான். அவரும் எங்களுக்கு எதிராக பல வழக்குகள் தொடர்ந்துள்ளார். எனது தாயை கொடுமைப்படுத்துவதை பார்த்தே வளர்ந்தவள் நான். இனிமேல் எனது தாயை தொடக்கூட அவரை அனுமதிக்க மாட்டேன்.

என்னை ஆபாசமாக நடிக்க வற்புறுத்தியது எனது தந்தைதான். எங்கள் குடும்பத்திற்கு எனது தந்தை கடனைத்தான் சேர்த்து வைத்தார். நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அவர் அழித்து விட்டார். படப்பிடிப்பு நடைபெறும் சமயங்களில் கூட அங்கு வந்து என்னைக் கொடுமைப்படுத்திய அவர் என்னைப் பற்றிப் பேச அருகதையில்லாதவர் என்றார் பானு.

பேட்டியின்போது அவரது தாய் ஷாலியும் உடன் இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X