மாற்றப்பட்ட ப்ரீத்தி ஜிந்தா-பிஎஸ்என்எல் தூதர் தீபிகா!

உலகின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் விளம்பரங்கள் மற்றும் இதர புதிய திட்டங்களுக்கு தூதராக ப்ரீத்தி ஜிந்தா இதுவரை இருந்து வந்தார்.
தனது விளம்பர வீச்சை அதிகரிக்கவும், போட்டியாளர்களைச் சமாளிக்கவும் அவரைவிட இளமையான புதிய நடிகையை ஒப்பந்தம் செய்ய பிஎஸ்என்எல் முடிவு செய்தது.
பல நடிகைகளின் பெயர்களைப் பரிசீலித்த பிஎஸ்என்எல் நிர்வாகம் இறுதியில் தீபிகா பதுகோனை ஒப்பந்தம் செய்துள்ளது.
அடுத்த ஆண்டு மட்டும் ரூ.100 கோடி செலவில் பல விளம்பரங்களை வெளியிடப் போகிறது பிஎஸ்என்எல். இவை அனைத்திலும் தோன்றப் போகிறவர் தீபிகாதான்.
இதற்காக அவருக்கு மொத்த விளம்பர பட்ஜெட்டில் 20 சதவிகிதம் சம்பளமாக வழங்கப்படும் எனத் தெரிகிறது.
இம்மாதிரி விளம்பர உத்திகள், ஒரு சாதாரண பொதுத்துறை நிறுவனம் என்ற இமேஜிலிருந்து வெளிவர பிஎஸ்என்எல்லுக்கு உதவும் என்றார் நிறுவத்தின் அதிகாரி ஒருவர்.


Click it and Unblock the Notifications











