ரூ 4 கோடி கொடுக்க முன்வந்தும் தனியார் விருந்தில் ஆட மறுத்த தீபிகா!!
ரூ 4 கோடி ரொக்கமாகத் தருகிறோம் என ஆசை காட்டியும், தனியார் விருந்து நிகழ்ச்சியில் ஆட மாட்டேன் என மறுத்துள்ளார் நடிகை தீபிகா படுகோன்.
இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன். தமிழில் ரஜினி ஜோடியாக ராணா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தீபிகா படுகோனை விருந்து நிகழ்ச்சியொன்றில் ஆட ரூ.4 கோடி வரை பேரம் பேசியுள்ளனர். ஆனால் அவர் ஆட மறுத்து விட்டார். இதுகுறித்து தீபிகா படுகோன் கூறுகையில், "நடிகைகள் பணத்துக்காக எதையும் செய்வார்கள் என்று ஒரு கருத்து உள்ளது. இது தவறு.
லண்டனில் கோடீஸ்வரர் ஒருவர் வீட்டில் விருந்து நிகழ்ச்சியொன்றில் என்னை ஆட அழைத்தனர். அதற்கு ரூ.4 கோடி தருவதாக கூறினார்கள். 'தம்மரே தம்' என்ற ஒரு பாட்டுக்கு மட்டும் ஆடினால் போதும் என்றனர். நான் தமாஷ் செய்கிறார்கள் என்று நினைத்தேன்.
அதன்பிறகு கடிதம் அனுப்பியும் வற்புறுத்தினார்கள். ஒரு பாட்டுக்கு ஆட ரூ.4 கோடி தருவார்களா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
பிறகு நான் அந்த அழைப்பை நிராகரித்து விட்டேன். சினிமாதான் எனக்கு முக்கியம். அதில்தான் ஆடுவேன். பணத்துக்காக வீட்டு விருந்துக்கெல்லாம் ஆடமாட்டேன் என்று மறுத்து விட்டேன். அது என் வேலையும் அல்ல," என்றார்.
தம் மரோ தம் எனும் படத்தில் படு செக்ஸியாக ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் தீபிகா. அதே செக்ஸி உடையில் தங்கள் விருந்திலும் ஆட வேண்டும் என அந்த லண்டன் பார்ட்டி கேட்டுக் கொண்டாராம். அதனால்தான் தீபிகா மறுத்துவிட்டார் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











