For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தீபிகாவுடன் மீண்டும் காதலா?- டோணி மழுப்பல்

    By Staff
    |

    Deepika Padukone
    இந்தி நடிகை தீபிகா படுகோனும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோணியும் மீண்டும் நெருக்கமாகிவிட்டதாக பாலிவுட்டில் பரபர செய்திகள் உலா வருகின்றன.

    டோனியும், தீபிகா படுகோனேயும் முன்பு நெருக்கமாக இருந்தனர். இருவரும் தீவிரமாக காதலிப்பதாக கூறப்பட்டது.

    ஆனால் இடையில் டோனியுடன் நடிகை லட்சுமி ராய் நெருக்கமாகிவிட, இருவரும் காதலிப்பதாக புதிய செய்தி உலா வந்தது. அடுத்து கல்லூரி மாணவி ஒருவருடன் டோணி சுற்றுவதாகவும் தகவல் வந்தது.

    டோணியின் காதலி யார் என்பதைக் கண்டுபிடுப்பதையே ஒரு பெரிய போட்டியாகக் கூட வைத்தது ஒரு வட இந்தியப் பத்திரிகை.

    இந்த நிலையில் நேற்று கொல்கத்தாவில் நடந்த பேஷன் ஷோ நிகழ்ச்சி ஒன்றில் டோனி கலந்து கொண்டார். அவருடன் நடிகை தீபிகா படுகோனேயும் பங்கேற்றதுடன், நவீன ஆடைகள் அணிந்து மேடையில் ஒன்றாகத் தோன்றினார்கள்.

    பேஷன் ஷோ முடிவில் இருவருக்குமிடையிலான நெருக்கம் குறித்துக் கேட்டதறகு டோணி பதில் கூறவில்லை. மீண்டும் பேஷன் ஷோவில் பங்கேற்பீர்களா? என்றதற்கு, கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பேன் என்றார்.

    அடுத்து ஒரு விருந்து நிகழ்ச்சியிலும் இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்டுள்ளனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X