'அய்யோ' இஷா!

By Staff

Esha deol
தமிழ்ப் பெண்கள் தமிழ் சினிமாவில் அருகி வரும் நிலையில், இந்திப் படம் ஒன்றில் தமிழ் பேசி நடிக்கிறார் முன்னாள் கனவுக் கன்னி ஹேமமாலினியின் அழகுப் பெண் இஷா தியோல்.

ஹேமா சுத்தமான தமிழ்ப் பெண். மயிலாப்பூரிலிருந்து மும்பைக்குப் போனவர். தமிழ்ப் பெண்ணாக இருந்தாலும் இந்தியில் சாதித்தவர். இன்றும் கூட அழகு குன்றால் பொலிவாக இருக்கும் ஹேமமாலினி, ஹேராம் படத்தின் மூலம் பெரும் இடைவெளிக்குப் பின்னர் தமிழில் நடித்தார்.

அவரது மகளான இஷா தியோலும், தாய் ஹேமா, தந்தை தர்மேந்திரா, பிரதர்ஸ் சன்னி தியோல், பாபி தியோல் வரிசையில் நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் இஷா தியோல், ஒன், டூ, த்ரீ என்ற முழு நீள காமெடிப் படத்தில் தமிழ்ப் பெண்ணாக கலக்கிக் கொண்டிருக்கிறாராம்.

முதலில் இஷாவின் கேரக்டர் தமிழ்ப் பெண்ணாக இல்லை. ஆனால் அவர் பேசும் அழகிய தமிழைக் கேட்ட இயக்குநர் அஸ்வினி தீர், பேசாமல் தமிழ்ப் பெண்ணாகவே நடித்து விடுங்களேன் என்று இஷாவிடம் கூற அவருக்கும் சந்தோஷமாகி விட்டதாம்.

இப்போது படம் முழுக்க பரவலாக தமிழ் பேசி கலக்கிக் கொண்டிருக்கிறாராம் இஷா. கூடவே இஷா அவ்வப்போது ஸ்டைலாக சொல்லும் அய்யோ என்ற வார்த்தையையும் பெருமளவில் பயன்படுத்தி இஷா கேரக்டரை நளினமாக்கி விட்டாராம் அஸ்வினி.

இஷாவின் அப்பா ஜாட் ஆக இருந்தாலும், அம்மா தமிழ் என்பதால் இஷாவுக்கு தமிழ் நன்றாகவே வருமாம். வீட்டில் கூட அம்மாவுடன் தமிழில்தான் அளவளாவுவாராம் இஷா. சும்மா சொல்லக் கூடாது, நம்ம ஊர் டிவி காம்பியர்களை விட பக்கா தமிழில் பேசுகிறார் இஷா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X