கோபிகா நிச்சயதார்த்தம்!

கேரள மந்திரிகள் ராஜேந்திரன் மற்றும் விஸ்வநாதன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விரைவில் தம்பதிகளாகப் போகும் கோபிகாவையும்-அஜிலேஷையும் வாழ்த்தினார்கள். நடிகைகள் பாவனா, சம்விர்தா, ரம்யா நம்பீசன், சம்யுக்தா, நடிகர் பிஜூ மேனன் ஆகியோர் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டனர்.
சிவப்பு மற்றும் மஞ்சள் நிற காக்ரா சோளியில் தகதகவென மின்னிய கோபிகா, திரைப்படங்களில் பார்ப்பதை விட அழகாக, மகிழ்ச்சிப் புன்னகையுடன் காணப்பட்டார். மணமக்கள் வைர மோதிரம் மாற்றி திருமணத்தை நிச்சயம் செய்தனர்.
நாளை மறுதினம் எர்ணாகுளத்தில் உள்ள புனித தாமஸ் சர்ச்சில் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. ஜூலை 20-ம் தேதி அவென்யூ சென்டரில் வரவேற்பு நடைபெற உள்ளது.
திருமணத்துக்குப் பிறகு நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு அயர்லாந்தில் செட்டிலாகப் போகிறார் கோபிகா.
வாழ்த்துக்கள் சேச்சி!
Comments


Click it and Unblock the Notifications