ஆன்டனியோ பன்டாரஸுடன் சேரும் பிரீடா

ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் மூலம் உலகப் புகழ்பெற்ற பிரீடா பின்டோ தற்போது பிரபல ஹாலிவுட் நடிகர் ஆன்டனியோ பன்டாரஸுடன் சேர்ந்து நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தின் பெயர் பிளாக் தர்ஸ்ட். இதை ஜீன்-ஜாக்ஸ் அன்னாட் இயக்குகிறார்.
இது 1920-ம் ஆண்டின் போது எண்ணெய் தேடி அமெரிக்கா, வளைகுடா நாடுகளின் மீது குறிவைத்ததை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுகிறது.
படத்தில் பின்டோ அரேபிய இளவரசியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ரஹிம் நடிக்கிறார். ஆனால் அவரும் பன்டாரஸும் சேர்ந்து வரும் காட்சிகள் அதிகம் உள்ளது.
இப்படத்தின் கதை ஹான்ஸ் ஆர். ரூஷ் எழுதி 1957-ம் ஆண்டு வெளியிடப்பட்ட புகழ்பெற்ற சவுத் ஆப் தி ஹார்ட்: எ நாவல் ஆப் மாடர்ன் அரபியா என்ற நூலைத் தழுவியுள்ளது.
இது பின்டோவின் 6-வது சர்வதேச அளவிலான படமாகும்.
Comments


Click it and Unblock the Notifications