அஜீத் படத்திலிருந்து காத்ரீனா விலகல்

அஜீத்தின் இந்தப் புதிய படத்தில் முதலில் ஷ்ரியா ஹீரோயினாக நடிக்கவிருந்தார். ஆனால் அவர் இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தில் வடிவேலுவுடன் ஒரு பாட்டுக்கு ஆடியதால் கடுப்பான அஜீத், ஷ்ரியாவை தூக்கச் சொல்லி விட்டார்.
இதையடுத்து சல்மான் கானின் காதலி காத்ரீனா கைபை நாயகியாக்கினர். ஏகன் படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு சமீபத்தில் மலேசியாவில் நடந்தது.
2வது கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் தொடங்கவுள்ள நிலையில் திடீரென காத்ரீனா படத்திலிருந்து விலகி விட்டாராம்.
பாலிவுட்டில் தீவிர கவனம் செலுத்தவுள்ளதால் அஜீத் படத்தில் நடிக்க இயலவில்லை என்று கூறி விட்டாராம் காத்ரீனா.
கடந்த வாரம்தான் காத்ரீனா கைப், புதிதாக 2 இந்திப் படங்களில் ஒப்பந்தமானார். இதில் அவருக்கு சம்பளமாக ரூ. 6 கோடி பேசப்பட்டுள்ளதாம். இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நாயகிகள் பட்டியலில் ஐஸ்வர்வயாவுடன் காத்ரீனா இணைந்துள்ளார். ரோபோட் படத்தில் ஐஸ்வர்யாவுக்கு 6 கோடிதான் சம்பளமாக பேசப்பட்டிருக்கிறது என்பது நினைவிருக்கலாம்.
இதுதவிர கபீர்கான் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறாராம் காத்ரீனா. அதில் ஜான் ஆப்ரகாம், காத்ரீனாவுடன் இணைந்து நடிக்கிறார். யாஷ் ராஜ் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
காத்ரீனா கையை விரித்து விட்டதால் மறுபடியும் அஜீத்துக்கு ஜோடியைத் தேடும் வேலையை இயக்குநர் ராஜு சுந்தரம் ஆரம்பித்துள்ளார்.
பேசாமல், ஷ்ரியாவையே பேசி முடித்து விடலாமே!


Click it and Unblock the Notifications











