குழந்தைகளுக்காக நானும், பிரகாஷ்ராஜும் தொடர்பில் இருக்கிறோம் : லலிதாகுமாரி விளக்கம்

By Siva

குழந்தைகள் நலனுக்காக தானும், பிரகாஷ்ராஜும் தொடர்பில் இருப்பதாக லலிதாகுமாரி தெரிவித்துள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜும், நடிகை லலிதாகுமாரியும் காதலித்து திருமணம் செய்துகொணடனர். தற்போது 14 ஆண்டுகள் கழித்து கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கின்றனர்.

விவாகரத்து முடிந்த கையோடு பிரகாஷ்ராஜ் இந்திப்பட நடன இயக்குநர் போனி வர்மாவை திருமணம் செய்து கொணடார்.

இந்நிலையில் பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் உருவாகிய பயணம் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. உடனே அவரது முதல் மனைவி தனக்கு சொந்தமான ரூ. 50 லட்சம் மதிப்பிலான சொத்துக்களை நீதிமன்றத்தில் பணயமாக வைத்து படத்தை வெளியிட பேருதவியாக இருந்தார். அதற்காக பிரகாஷ்ராஜ் நன்றி தெரிவித்தார்.

முன்னாள் கணவர் பிரகாஷ்ராஜுக்கு உதவ உங்களால் எப்படி உதவ மனம் வந்தது என்று லலிதாகுமாரியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது,

விவாகரத்துக்கு பிறகு எனது வாழ்க்கை கோப தாபமின்றி அமைதியாக இருக்கிறது. பிரகாஷ்ராஜின் பயணம் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது பற்றி தெரிய வந்தது. உடனே எனது சொத்துக்களை பணயமாக வைத்து அவருக்கு உதவுவது என்று முடிவு செய்தேன். இந்த சொத்துக்கள் எல்லாம் அவர் எனக்கு கொடுத்தவை. அதை தான் நான் திருப்பிக் கொடுத்துள்ளேன். எனக்கும், குழந்தைகளுக்கும் அவர் எப்போதும் தேவை. நான் ஒன்றும் பெரிதாக செய்துவிடவில்லை. குழந்தைகளுக்காக நாங்கள் விவாகரத்திற்கு பிறகும் தொடர்பில் உள்ளோம்.

குழந்தைகள் விஷயத்தில் நான் அவரைக் கேட்காமல் எதுவும் செய்வதில்லை. நான் ஒருமுறை வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. அப்போது குழந்தைகளை அவர் வீட்டில் தான் விட்டுச் சென்றேன். அவர்கள் குழந்தைகளை நன்றாகப் பார்த்துக் கொண்டனர்.

கணவன், மனைவி பிரியலாம். ஆனால் குழந்தைகளை தந்தையை விட்டு பிரிக்கக் கூடாது. முன்னாள் கணவரை யாரும் எதிரியாகக் கருதக் கூடாது. நாங்கள் தற்போது பிரிந்து வாழலாம். ஆனால் கடந்த 14 வருடங்களாக ஒன்றாக சந்தோஷமாக வாழ்ந்திருக்கிறோம் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X