வேண்டாம் மலையாளம்-மீரா ஜாஸ்மின்!

இருந்தும் மின்னம்மினிகூட்டம் என்ற படத்தில் நடித்தார்.
இப்போது மலையாளப் படங்களில் நடிப்பதில்லை என அவரே முடிவு செய்து அதை சம்பந்தப்பட்ட சங்கத்தினருக்கும் தெரிவித்துவிட்டாராம் மீரா.
இதற்கு அவர் சொல்லும் காரணம்:
யாரும் சும்மா வாய்ப்புக் கொடுப்பதில்லை. ஒரு படத்தில் நடிப்பதற்குள் ஒரு நடிகை படும்பாடு கொஞ்சமல்ல. என்மீது புகார் கூறுபவர்கள் எல்லாம் யோக்கியமா என்று அவர்களையே கேட்டுக் கொள்ளட்டும்.
இனி இதைப் பற்றிப் பேசவே வேண்டாம்... நானும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். இனி மலையாளப் படங்கள் வேண்டாம். மற்ற மொழிப் படங்களில் வருகிற வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டாலே போதும் என நினைக்கிறேன்.
ஒரு பக்கம் என்னை தேவையின்றி அவமானப்படுத்தும் திரையுலகினர், மறுபக்கம் காரணமே இல்லாமல் என்னைக் குறிவைக்கும் மீடியா... இரண்டிலிருந்தும் ஒதுங்கி, பிற மொழிகளில் நடிக்கப் போகிறேன், என்கிறார் கடுப்பாக மீரா.
இப்போதைக்கு கைவசம் தெலுங்கு மற்றும் கன்னடப் பட வாய்ப்புகளை கணிசமாக வைத்திருக்கும் மீரா, மீண்டும் கோடம்பாக்க நண்பர்களைத் தேடி வருகிறார்.
மலையாளத்தில் மம்முட்டி மற்றும் மோகன்லாலுடன் நடிக்கவிருந்த இரு பட வாய்ப்புகளையும் உதறிவிட்டாராம் மீரா.
இன்னொரு பக்கம், வாய்ப்புகளை அவர் மறுக்கவில்லை. நாங்கள்தான் அவரை வேண்டாமென்று ஒதுக்கி வைத்திருக்கிறோம், என்கிறார்கள் இந்தப் படங்களின் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும்.


Click it and Unblock the Notifications











