போஜ்பூரி போகும் மும்தாஜ்

அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல் என்பார்கள். அதற்காக அரசியல்வாதிகள் எல்லோரும் அயோக்கியர்கள் என்று கூறக் கூடாது. அது ஒரு முதுமொழி. அதேபோல, தமிழ் சினிமா நாயகிகளின் கடைசிப் புகலிடமாக போஜ்பூரி திரையுலகம் திகழ்ந்து வருகிறது.
இங்கும், எங்கும் மார்க்கெட் பறி போனவர்கள், கடைசியில் போஜ்பூரியில் நுழைந்து கிட்டத்தட்ட சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
முதலில் நக்மா போனார். இன்று வரை அவர் அங்கு டாப் பேவரைட் நாயகியாக உள்ளார். அதேபோல ரம்பாவும் போஜ்பூரியில் சில படங்களில் நடித்தார்.
இந்த வரிசையில் விரைவில் இணையப் போகிறாராம் மும்தாஜ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என எந்த மொழியிலும் மும்தாஜுக்கு இப்போது முகவரி இல்லாமல் போய் விட்டது.
பல்கிப் பெருகி விட்ட அவரது உடல்வாகுதான் மார்க்கெட் குறைய முக்கிய காரணம் என பலரும் சொல்லவே, கஷ்டப்பட்டு தனது உடல் எடையைக் குறைத்து கன்ட்ரோல் ஆகியுள்ளார்.
இதையடுத்து மீண்டும் குண்டுச் சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்ட விரும்பாத மும்தாஜ், போஜ்பூரி பக்கம் தனது கவர்ச்சிப் பார்வையை திருப்பியுள்ளார்.
புதிதாக ஒரு கவர்ச்சிகரமான புகைப்பட ஆல்பத்தையும், வீடியோ ஆல்பத்தையும் ரெடி செய்து போஜ்பூரிக்காரர்களுக்கு அனுப்பி வைத்துள்ளாராம். விரைவில் ஓலை வரும் என்ற நம்பிக்கை உள்ளதாம்.
எனவே இனிமேல் மும்தாஜின் சேவை தமிழுக்கு இருக்காது என்று கூறப்படுகிறது.
பொருளாதார நெருக்கடிக் கவலையில் இது வேறு புதுக் கவலை!


Click it and Unblock the Notifications