twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    '50 எல்' இருந்தா பேசலாம்! - நமீதா ஸ்ட்ரிக்ட்!!

    By Staff
    |

    Namitha
    இனி எந்தப் புதுப்படமாக இருந்தாலும் ரூ.50 லட்சம் இருந்தால்தான் கால்ஷீட் என கறாராகக் கூறிவருகிறார் சூரத் செக்ஸ் குண்டு நமீதா.

    நமீதா தலையைக் காட்டும் படம் எதுவாக இருந்தாலும் முதலுக்கு மோசமில்லாத அளவு நல்ல பிஸினஸ் என்ற உத்தரவாதம் இருப்பதால், முன்பு சில்க் ஸ்மிதாவை எப்படி எல்லாப் படங்களிலும் ஒரு காட்சியிலாவது தோன்ற வைப்பார்களோ, அப்படி நமீதாவையும் நடிக்க வைக்கத் துடிக்கிறார்கள் தமிழ்ப்பட தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும்.

    இந்த செண்ட்மெண்ட் தொழிலதிபர்கள் மத்தியிலும் நிலவுவதால், பெரும்பாலானோர் நமீதாவை தங்கள் கடைத் திறப்பு, தொழிற்சாலை திறப்பு என அழைத்து பரவசப்பட்டு வருகிறார்கள்.

    இந்த பொன்னான நேரத்தை நழுவவிட முடியுமா... அதனால் நமீதாவும் தெளிவாக தனது 'பணக்கொள்கை'யை அறிவித்துள்ளார்.

    ஒரு படத்தின் முதல் நாயகியாக இருந்தாலும் சரி அல்லது இரண்டாம் நாயகியாக இருந்தாலும் சரி, எந்தப் பாத்திரமாக இருந்தாலும் ரூ.50 லட்சம் சம்பளம் என கறாராகப் பேசிவிடுகிறார். ஒற்றைப் பாடலுக்கும் இதே நிலைதான்.

    'மும்பையில இருந்து பெரிய நடிகைகளைக் கூட்டி வர 1 கோடி வரை செலவு பண்ணும்போது எனக்குப் பண்ணக் கூடாதா..' என்ற நமீயின் செல்லச் சிணுங்களில் தயாரிப்பாளர்கள் கரைந்தே போகிறார்களாம்.

    கடைத்திறப்புக்கு ரூ.5 லட்சம் வரை காணிக்கை தரப்படுகிறதாம் இந்த கவர்ச்சிப் புயலுக்கு!

    ப.சிதம்பரத்தின் நிதிக் கொள்கையை விட நமீதாவின் பணக் கொள்கை படு கறாராக இருக்கே..!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X