'அந்த' கேரக்டரில் நவ்னீத் கெளர்!

விஜயகாந்த்தின் 150வது படம் அரசாங்கம். அதில் அவருக்கு இரட்டை ஜோடிகள். ஒருவர் கலக்கலான ஷெரில் பின்டோ, இன்னொருவர் அமர்க்களமான நவ்னீத்கெளர்.
இதில் ஷெரிலுக்கு விஜயகாந்த்துடன் ஜோடி சேர இன்னொரு வாய்ப்பும் உடனடியாக கிடைத்தது. எங்கள் ஆசான் படத்தில் விஜயகாந்த்துடன் இணைந்து நடித்து வருகிறார் ஷெரில்.
இந்த நிலையில் நவ்னீத்கெளருக்கு இன்னொரு தமிழ்ப் படம் கிடைத்துள்ளது. இந்தியில் வெளியான சமேலி படத்தின் தமிழ் ரீமேக்கில் நவ்னீத்கெளர் நடிக்கிறார்.
இந்தப் படத்தின் நாயகி விபச்சார பெண். அந்த வேடத்தில்தான் நவ்னீத் கெளர் நடிக்கவுள்ளார். சவாலான இந்த கேரக்டரில் நடிக்க பலரும் தயங்கிய நிலையில் நான் நடிக்கிறேன் என துணிந்து நடிக்க முன் வந்துள்ளாராம் நவ்னீத் கெளர்.
இந்தியில் இந்த வேடத்தில் நடித்தவர் கரீனா கபூர். அவர் அளவுக்கு இல்லாவிட்டாலும் சிறப்பான முறையில் நடிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் நவ்னீத் கெளர்.


Click it and Unblock the Notifications











