நயன்தாராவை தடுத்த பக்தர்கள்!

கேரள மாநிலம் திருச்சூர் அருகில் கெல்லிக்காவு அம்மன் கோவில் என்ற பழமையான கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிகிறார்கள்.
இந்தக் கோயிலுக்கு அருகில்தான் பாடிகார்ட் மலையாளப் படப்பிடிப்பு நடந்தது. நயன்தாராவிடம் இந்த அம்மன் பற்றி ஏற்கெனவே சிலர் கூறியிருந்ததால், தரிசனத்துக்கு செல்ல விரும்பினாராம்.
படப்பிடிப்பு இடைவேளையில் நயன்தாரா, காரில் அந்த கோவிலுக்கு வந்தார். அப்போது அவர் சுடிதார் அணிந்திருந்தார். கெல்லிக்காவு அம்மன் கோவிலுக்குள் சேலை அணிந்த பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இவரோ சுடிதாருடன் சடசடவென கோயிலுக்குள் நுழைய, அவரைச் சூழ்ந்து கொண்ட பக்த கோடிகள், 'சுடிதாருடன் எப்படி ஆலயத்துக்குள் நுழையலாம்?' என்று அவருக்கு 'அர்ச்சனை' செய்ய ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் அவர்களுடன் வாக்குவாதம் செய்த நயன், பின்னர் வேறு வழியின்றி மன்னிப்புக் கேட்டுவிட்டு நடையைக் கட்டினார், அம்மன் தரிசனம் நடக்காமலேயே!


Click it and Unblock the Notifications











