நயனதாரா இனி 'கோடீஸ்வரி'!

பில்லாவைத் தொடர்ந்து நயனதாரா அடித்துள்ள 2வது செஞ்சுரி யாரடி நீ மோகினி. இதனால் நயனதாராவின் சம்பளத்தை தயாரிப்பாளர்களே ரூ. 1 கோடியாக உயர்த்தி விட்டனராம்.
தற்போது ரஜினியுடன் குசேலன், அஜீத்துடன் ஏகன், விஷாலுடன் சத்யம் என படு பிசியாக இருக்கிறார் நயனதாரா. இதையடுத்து பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள சிங்கம் படத்தில் இணையவுள்ளார் நயனதாரா.
தமிழில் பெருமளவில் வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளதால் தெலுங்கில் தனது படங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க தீர்மானித்துள்ளாராம் நயனதாரா. மேலும் சென்னையிலேயே அதிகம் தங்கவும் முடிவு செய்துள்ளாராம்.
இருந்தாலும் முன்னாள் நண்பரால் ஏதேனும் வம்பு வரலாமோ என்ற பயம் இன்னும் நயனதாராவை விட்டு முழுக்க போய் விடவில்லையாம். அதற்குக் காரணம், அந்த முன்னாள் தோஸ்த், முன்பு போல எஸ்.எம்.எஸ். அனுப்ப ஆரம்பித்திருக்கிறாராம். இதுதான் நயனதாராவை டென்ஷன் ஆக்கி வருகிறதாம்.
நண்பரின் முயற்சிகள் பலிக்குமா, நயனதாரா தனக்குத் தானே போட்டுக் கொண்டுள்ள இரும்புத் திரை விலகுமா என்ற எதிர்பார்ப்பில் கோலிவுட்டில் சிலர் கொட்டக் கொட்ட விழித்தபடி கண்காணித்துக் கொண்டுள்ளனராம்.


Click it and Unblock the Notifications











