கவர்ச்சிக்கு ராகினி ஜே!

By Staff

Ragini
கவர்ச்சி நடிப்புதான் எனக்குப் பிடித்திருக்கிறது. கவர்ச்சி நாயகியாக தமிழ் சினிமாவைக் கலக்க ஆர்வமாக உள்ளேன் என்று கூறியிருக்கிறார் மலேசிய வரவான சண்டை நாயகி ராகினி.

சமீபத்தில் வெளியாகி ஹிட் ஆன ஷக்தி சிதம்பரத்தின் சண்டை படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் ராகினி. மலேசியாவில் பிறந்து வளர்ந்து கோலிவுட்டில் கால் பதித்துள்ள ராகினி, முதல் படத்திலேயே கிளாமரில் கலக்கியுள்ளார்.

டூ பீஸ் உடைகளிலும் தாராள கவர்ச்சி காட்டி ரசிக மனங்களை பீஸ் பீஸ் ஆக்கியுள்ளார். இவரது கவர்ச்சிக்கு தயாரிப்பாளர்கள், இயக்குநர்களிடையே ஏகப்பட்ட வரவேற்பாம். இதனால் கை நிறையப் பட வாய்ப்புகள் ராகினியிடம் குவிந்திருக்கிறதாம். தெலுங்கிலிருந்தும் கூட சிலர் பேசி விட்டுப் போயிருக்கிறார்களாம்.

தனது கவர்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் தொடர்ந்து கவர்ச்சி காட்டிக் கலக்க தீர்மானித்துள்ளாராம் ராகினி. சண்டை படத்தைத் தொடர்ந்து சுந்தர்.சியுடன் தீ படத்திலும் ஜோடி போட்டுள்ளார் ராகினி. அதிலும் கிளாமர் கலக்கல் அமோகமாக இருக்குமாம்.

தனது திரையுலக வெற்றி குறித்து ராகினி கூறுகையில், சண்டை படத்திற்குப் பிறகு தனி ஹீரோயினாக நடிக்க எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. இருப்பினும் நல்ல படங்களாக தேர்வு செய்து நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். நிறைய வாய்ப்புகள் வந்தபோதிலும் கூட பார்த்து பார்த்து செலக்ட் செய்து நடிக்கவுள்ளேன்.

படத்திற்கு கிளாமர் அவசியம் என்பது எனக்குத் தெரியும். சண்டை படத்தின் ஸ்கிரிப்ட்டுக்கு கிளாமர் தேவைப்பட்டதால் கிளாமர் காட்டி நடிக்க நான் தயங்கவில்லை.

எனக்கு கிளாமராக நடிக்கத்தான் ஆர்வம் அதிகம். இருப்பினும் வரைமுறையில்லாமல் கிளாமராக நடிக்க மாட்டேன். எனது அளவு, எது எல்லை என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அதை புரிந்து கொண்டு நடிப்பேன்.

விரைவில் சண்டை படம் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. அதிலும் நான் நடிக்கவுள்ளேன் என்கிறார் ராகினி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X