ரஜினியுடன் நான்-ஸ்னேகா சிலிர்ப்பு!

ரஜினிகாந்த், நயனதாரா இணையில், பி.வாசு இயக்க தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படம் குசேலன். இப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்களை இணைத்து படத்திற்கு வெயிட் ஏற்றி வருகிறார் வாசு.
அதன்படி ஒரு பாடல் காட்சியில் திரிஷா, ஸ்னேகா, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோருடன் ரஜினி ஆடிப் பாடுவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அனுபவம் குறித்து ஸ்னேகா பார்ப்பவர்களிடமெல்லாம் பிரமித்துப் பேசி வருகிறார்.
ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து ஸ்னேகா கூறுகையில், இப்படி ஒரு மனிதரை நான் எனது வாழ்க்கையில் பார்த்ததே இல்லை. குசேலன் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்த பிறகுதான் எனது திரையுலக வாழ்க்கை அர்த்தப்பூர்வமாகியுள்ளது.
குசேலனில் நான் நடிகை ஸ்னேகாவாகவே சில காட்சிகளில் வருகிறேன். ஒரு பாடலில் ரஜினி சாருடன் இணைந்து ஆடியுள்ளேன். இது மிகப் பெரிய கெளரவம்.
ஆனால் ரஜினியுடன் ஒரு படத்திலாவது ஜோடியாக நடித்து விட வேண்டும் என்பதுதான் எனது ஆசை. அப்படி ஒரு வாய்ப்பு வர வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டிருக்கிறேன் என்கிறார் ஸ்னேகா.


Click it and Unblock the Notifications











