சகலகலா சமீரா!

By Staff

Sameera Reddy
இந்தியில் கவர்ச்சிப் புயலாக கலக்கிக் கொண்டிருக்கும் சமீரா ரெட்டி, தமிழுக்கும் வந்துள்ளார். கிளாமர் மட்டுமல்லாமல் சகலகலா ரோல்களிலும் கலக்க ஆர்வமாக இருக்கிறாராம் சமீரா.

ஆந்திரம் தந்த அழகிய பெண்ணான சமீரா ரெட்டிக்கு, பாலிவுட் ரெட் கார்பெட் வரவேற்புக் கொடுத்து வரவேற்றது. தொடர்ந்து கவர்ச்சியில் அங்கு கலக்கிக் கொண்டிருந்த சமீரா இப்போது பலவிதமான கேரக்டர்களிலும் கலக்க ஆரம்பித்திருக்கிறார்.

கிளாமர், காமெடி, அதிரடி என பலவிதமான கேரக்டர்களாகப் பார்த்து பார்த்து நடிக்க ஆரம்பித்திருக்கும் சமீரா, சைடில் தமிழுக்கும் வந்துள்ளார். சூர்யா நடிக்கும், கெளதம் மேனனின் வாரணம் ஆயிரம் படத்தில் சமீராவும் இருக்கிறார்.

சூர்யா எனக்கு ரொம்பப் பிடித்த ஹீரோ. அவருடன் ஜோடி போட்டு நடிக்க வேண்டும் என்று கெளதம் சொன்னவுடனேயே ஒத்துக் கொண்டு விட்டேன். தமிழில் நடிப்பது நிச்சயம் வித்தியாசமான அனுபவம். இங்கே எல்லாமே பாஸ்ட். பாலிவுட்டில் அப்படி இல்லை என்று சூர்யா பிளஸ் தமிழ் சினிமா புராணம் பாடுகிறார் சமீரா.

பாலிவுட்டில் சமீரா நடித்த ரேஸ், கல்புருஷ், ரெட் அலர்ட், முசாபிர் என அனைத்துப் படங்களுமே சூப்பர் ஹிட். அதிலும் ரெட் அலர்ட் படத்தில் நக்சலைட் பெண்ணாக வந்து பயமுறுத்தியிருக்கிறாராம்.

இஷா தியோல் ஹீரோயினாக நடிக்கும் ஒன் டூ த்ரீ படத்தில் காமெடியில் வெளுத்துக் கட்டியுள்ளார்.

கிளாமர் மட்டும்தான் எனக்குத் தெரியும் என நிறையப் பேர் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் எனது ஒவ்வொரு படமும் ஒரு வித டேஸ்ட்டில் இருப்பதைப் பார்த்து நான் நல்ல நடிகை என்பதை புரிந்து கொண்டு விட்டனர் என்கிறார் சமீரா.

தமிழிலும் கலக்க ஆசையாக இருக்கும் சமீரா, வாரணம் ஆயிரம் படத்திற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து தமிழிலும் நடிக்க ஆர்வம் காட்ட தீர்மானித்துள்ளாராம்.


More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X