அஞ்சல் வழியில் எம்ஏ படிக்க மும்பைக்குப் போன ஷெரீன்!

இந்தப் பட்டியலில் லேட்டஸ்ட் வரவு ஷெரீன்.
துள்ளுவதோ இளமையில் அறிமுகமானவர் தொடர்ந்து கலக்குவார் என்று பார்த்தால், காதல், பெற்றோருடன் மோதல், மீண்டும் சமரசம் என குடும்ப டிராவிலேயே பொழுதைக் கழித்துவிட்டார். மீதி நேரத்தில் அவர் நடித்த படங்கள் எதுவும் ஓடவில்லை.
திடீரென்று காணாமல் போன ஷெரீன் இப்போது மீண்டும் வந்துள்ளார்.
எங்கே போனீர்கள்? என்ற கேள்விவிக்கு அம்மணி சொன்ன பதில் படிக்கிற புள்ளைகளுக்கு ஒரு உற்சாக டானிக்தான் போங்க.
"நான் ஏற்கனவே 'பி.ஏ.' முடித்து இருந்தேன். தொடர்ந்து படிக்க ஆசைப்பட்டேன். 'பூவா தலையா' படப்பிடிப்பு முடிந்ததும், மும்பை வந்துட்டேன். தபால் மூலம் 'எம்.ஏ.' படிக்க ஆரம்பித்தேன். பரீட்சை எழுதி, 'எம்.ஏ.' பட்டதாரி ஆகிவிட்டேன்.
படிக்க வந்துவிட்டதால், நடிப்பை மறந்து விட்டேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். தொடர்ந்து நடிப்பேன். நான் முன்பை விட அழகாக இருப்பதாக என் சினேகிதிகளும், சினேகிதர்களும் சொல்கிறார்கள். அதனால் எனக்கு தமிழ் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்...
படிப்புக்காக, என்னை தேடிவந்த 10 பட வாய்ப்புகளை தியாகம் செய்துவிட்டேன். இப்போது, படிப்பை முடித்து விட்டேன். அதனால் முன்பை விட, நடிப்பில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்து இருக்கிறேன்...", என்கிறார்.
சரீ... சென்னையில் இருந்தால் அஞ்சல் வழிக் கல்வியில் எம்ஏ முடிக்க முடியாதோ!


Click it and Unblock the Notifications











