twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இலங்கை போன ஸ்ரேயா... இந்து மக்கள் கட்சி 'ஆஜர்'!

    By Shankar
    |

    Shriya
    சென்னை: ஸ்ரேயா படப்பிடிப்புக்காக இலங்கை போயிருக்கும் செய்தியை முதன்முதலில் நாம் வெளியிட்டது நினைவிருக்கலாம்.

    போனவர் சும்மா இருக்காமல் இலங்கை அற்புதமான நாடு என்ற பழைய பல்லவியை ஆரம்பித்திருந்தார்.

    இப்போது அவருக்கு முதல் எதிர்ப்பு கிளம்பிவிட்டது. ஸ்ரேயா படங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி அவருக்கு எதிராகக் கிளம்பியுள்ளது.

    தீபா மேத்தா இயக்கும் வின்ட்ஸ் ஆப் சேஞ்ச் என்ற படத்தில் நடிக்கிறார் ஸ்ரேயா. இந்தி, ஆங்கில மொழிகளில் இப்படம் தயாராகிறது. இதன் படப்பிடிப்பு இலங்கையில் நடந்து வருகிறது.

    படப்பிடிப்பில் ஸ்ரேயா பங்கேற்று இலங்கையை புகழ்ந்து பேசியதை இந்து மக்கள் கட்சி கண்டித்து உள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர். குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

    இலங்கையில் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டாம் என்று நடிகர். நடிகைகள் ஏற்கனவே கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    லிபியா போன்ற நாடுகளில் மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதை ஐ.நா. சபை கண்டித்து யுத்தமும் நடத்தி வருகிறது. அதே நிலைமைதான் இலங்கையிலும் நடந்தது. லட்சக்கணக்கான தமிழர்களை ராஜபக்சே அரசு கொன்று அழித்தது அவர் மீது மனித உரிமை மீறல் விசாரணைகள் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் ஸ்ரேயா இலங்கை படப்பிடிப்புக்கு சென்றது கண்டிக்கத்தக்கது. நிறைய தமிழ் படங்களில் ஸ்ரேயா நடித்து உள்ளார். அவர் சமூக அக்கறையோடு நடந்து கொள்ள வேண்டும்.

    ஸ்ரேயா இலங்கை போனது மட்டுமின்றி அந்த நாடு அழகாக இருப்பதாகவும் படப்பிடிப்புகள் நடத்த உகந்த நாடு என்றும் புகழ்பாடி இருக்கிறார்.

    ஸ்ரேயா பேச்சை வன்மையாக எதிர்க்கிறோம். இலங்கைக்கு சாதகமாக நடந்து கொள்ளும் அவரது நடிவடிக்கைகள் தொடர்ந்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம். ஸ்ரேயா படங்களை புறக்கணிப்போம்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    புறக்கணிப்பெல்லாம் சரிதான்... ஆனா ஸ்ரேயாவுக்கு தமிழில் படமே இல்லையே!!

    English summary
    Hindu Makkal Katchi, one of the political outfits in Tamil Nadu, condemned actress Shriya for her recent trip to Sri Lanka. B R Kumar, the secretary of the party urged for fresh agitations against the actress and boycotting her films.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X