காதலரை கைவிட்ட 'ஸ்லம்டாக்' பிரீதா

By Staff

Freida Pinto
ஸ்லம்டாக் மில்லியனர் பட நாயகி பிரீதா பின்டோ, தனது காதலரைக் கைவட்டு விட்டார். நடிப்பில் கவனம் செலுத்துவதற்காக காதலருடனான நட்பை துண்டித்துக் கொண்டு விட்டதாக பிரீதாவின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில்தான் பின்டோவுக்கும், மும்பையைச் சேர்ந்த பி.ஆர். ஏஜென்ட் ரோஹன் அனடோவுக்கும் இடையே நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்த நிலையில், நான் நடிப்பில் தீவிர கவனம் செலுத்தப் போகிறேன், எனவே திருமணம் வேண்டாம் என அனடோவிடம் கூறி விட்டாராம் பின்டோ.

இப்போதுதான் நடிப்பு தொழில் சூடு பிடிக்கத் தொடங்கியிருப்பதால் திருமணம், குழந்தை, குட்டி என ரொட்டீன் வாழ்க்கையை விரும்பவில்லையாம் பின்டோ.

பின்டோ - அனடோ நிச்சயதார்த்தமே இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மீடியாவில் ஸ்லம்டாக் குறித்த புகழ் பரப்புரைகள் குண்டக்க மண்டக்க வெளியாகிக் கொண்டிருந்ததால் தனது தனிப்பட்ட வாழ்க்கையை அப்படியே ரகசியத்திற்குக் கொண்டு போய் விட்டார் பின்டோ.

விரைவில் கல்யாணம் என்ற கனவுடன் இருந்து வந்த அனடோ, பின்டோவின் முடிவால் சிதறிப் போய் விட்டாராம். பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளாராம்.

பிரீதாவும், அனடோவும், மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில்தான் சந்தித்தனர். பிரீதா ஆங்கில இலக்கியம் படித்தார். அனடோ வேதியியல் டிகிரி படித்துக் கொண்டிருந்தார்.

படிப்பை முடித்ததும் அனடோ சிறிய பி.ஆர். நிறுவனத்தைத் தொடங்கினார். ஸ்லம்டாக் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதுதான் கல்யாணம் செய்து கொள்ள இருவரும் தீர்மானித்தனர்.

நிச்சயதார்த்தம் முடிந்ததும் அனடோவின் புகைப்படங்கள் மற்றும் நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது பேஸ்புக்கில் வெளியிட்டிருந்தார் பின்டோ. ஆனால் தற்போது அவற்றைத் தூக்கி விட்டார்.

கடந்த இரு மாதங்களாகவே ஸ்லம்டாக் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக இங்கிலாந்து, அமெரிக்கா என சுற்றிக் கொண்டிருந்தார் பின்டோ. அதுதான் அவருக்கும், அனடோவுக்கும் இடையிலான உறவை முறித்து விட்டதாக கூறுகிறார்கள்.

தனக்கு மிக அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை கல்யாணம் என்ற சடங்குக்காக இழக்க பின்டோ விரும்பவில்லையாம். எனவேதான் நடிப்பில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்து விட்டாராம் பின்டோ.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X