காத்திருக்கும் சொர்ணமால்யா!

அலைபாயுதே மூலம் நடிப்புக் கடலில் காலெடுத்து வைத்த சொர்ணமால்யா முதல் படத்திலேயே நல்லா நடிக்கிறாரே என்று பெயர்வாங்கினார். தொடர்ந்து நடிப்பில் தீவிரமானார். இடையில் சிற்சில சர்ச்சைகள், சச்சரவுகள், ஒரு விவாகரத்து என வாழ்க்கைப் பயணம்.
இந்த நிலையில் மொழி படம் அவருக்கு நல்ல நடிகை என்ற பெயரை வாங்கித் தந்தது. ஜோதிகாவின் நடிப்போடு சொர்ணாவின் நடிப்பையும் அனைவரும் குறிப்பிட்டுப் பாராட்டினார்கள். இதனால் நெகட்டிவ் இம்பாக்ட் ஏற்பட்டு விட்டது.
சொர்ணமால்யாவுக்கு இப்படிப்பட்ட கேரக்டர்கள்தான் பொருத்தமாக இருக்கும் என நினைத்தவர்கள், அவரை நாடுவதையே விட்டு விட்டனராம்.
இனிமேல் நடித்தால் மொழி மாதிரி சத்தான படங்களில் மட்டுமே நடிப்பது என்ற முடிவில் இருக்கிறாராம் சொர்ணமால்யா. மொழி படத்தில் தன்னை நிரூபித்து விட்டதால் அது மாதிரியான கேரக்டர்கள் தேடி வரும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவருக்கு அப்படி எதுவும் வராதது ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறாராம்.
இருந்தாலும் எப்படியும் வராமலா போய் விடும் என்ற நம்பிக்கையில் நடனத்தின் பக்கம் முழுக் கவனத்தையும் திருப்பி விட்டு விட்டாராம்.


Click it and Unblock the Notifications











