பரத்துடன் ஜோடி சேருகிறார் கேரளத்து ரீமா கல்லிங்கல்

மஞ்சள் கிழங்கு போல பார்க்க பளிச்செனவும், நச்செனவும் இருக்கும் ரீமா, கேரளத்து அழகுப் பதுமை. கேரளத்து முகச் சாயல் பளிச்சிடுகிறது இவரது முகத்தில். மிஸ் கேரளா போட்டியில் பங்கேற்று முதல் ரன்னர் ஆப் ஆக தேர்வானவர்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் மலையாள திரையுலகினரின் கவனத்தை ஈர்த்த ரீமாவைத் தேடி திரைப்பட வாய்ப்புகள் வந்தன. அந்த வேகத்தில் 3 படங்களில் நடித்து முடித்து விட்டார். முதல் படம் ரித்து. 3வது படத்தில் பிருத்விராஜுடன் இணைந்து நடித்துள்ளார்.
இப்படி மலையாள உலகமறிந்த முகமாக ரீமா மாறியதும் ஆட்டோமேட்டிக்காக கோலிவுட்டில் மணி ஒலித்து அங்கு ஓடினார்கள். இப்படியாகத்தான் தமிழ் சினிமா நாயகியனார் ரீமா.
பாஸ்போர்ட் இல்லாமலேயே விசா கிடைத்தால் எப்படி இருக்கும். அந்த சந்தோஷம்தான் ரீமாவுக்கு இருந்ததாம் யுவன் யுவதி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது.
வலியக்க வந்த வாய்ப்பு என்பதால் மிகுந்த சந்தோஷத்துடன் இப்படத்தில் நடிக்கவுள்ளாராம். பரத் நாயகனாக நடிக்கிறார். சுத்தமான காதல் கதையாம் இது. இளமைத் துள்ளலுடன் கூடிய கதை என்பதால் ரீமாவுக்கு நிறைய வேலை வைத்துள்ளார்களாம்.
காமெடிக்கு சந்தானம், வில்லத்தனத்துக்கு சம்பத் என புக் ஆகியுள்ளனர். விஜய் ஆண்டனி இசையமைக்கிறார்.
இளமைத்துள்ளலுடன் கூடிய கதை என்பதால் ரீமாவின் கவர்ச்சிக் காட்சிகளும் கூட படத்தில் சிறப்பாக இருக்கும் என்கிறார்கள்.
எப்படியோ, (ஆசின்) தொட்டும்கல்லை (ரீமா) கல்லிங்கல் பீட் செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











