twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காதல் சிக்கலில் தேஜாஸ்ரீ!

    By Staff
    |

    Tejashree
    சின்னா வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா என்று கெட்ட ஆட்டம் போட்ட தேஜாஸ்ரீக்குப் புதுச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இது மனச் சிக்கல். அதாவது காதலில் விழுந்ததால் ஏற்பட்ட கல்யாணச் சிக்கல்.

    தேஜாஸ்ரீயும் காதல் வலையில் விழுந்து விட்டாராம். ஒரு கேமராமேனின் காதல் பார்வை இவர் மீது விழ, அதற்குப் பளிச்சென பதில் சமிக்ஞை கொடுத்து விட்டாராம் தேஜாஸ்ரீ.

    இப்போது இவர்களின் காதல், சினிமாஸ்கோப் ரேஞ்சுக்கு நீண்டு நெடிதுயர்ந்து வளர்ந்து கொண்டிருக்கிறதாம்.

    வழக்கமாக காதலுக்கு முதலில் பெற்றோர்களின் எதிர்ப்பு தானே வரும். அது போலவே இவர்களுக்கும் இரு வீட்டிலிருந்தும் எதிர்ப்புகள் சரமாரியாக கிளம்பியுள்ளதாம்.

    இருந்தாலும் காதலில் இருவரும் உறுதியாக இருப்பதாகவும், முடிந்தவரை பெற்றோர்களின் அனுமதிக்காக முயற்சிப்பது, முடியாவிட்டால் தனி வழியில் பயணிப்பது என்ற முடிவில் இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

    தேஜாஸ்ரீ முன்பு போல லைம்லைட்டில் இல்லை. சினிமா வாய்ப்புகள் மங்கிப் போய் விட்டதால் டிவி ரியாலிட்டி ஷோக்களில் தலை காட்டிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X