காதலர் தினம் தேவைதானா?-த்ரிஷா

ஐங்கரன் நிறுவனம் தயாரித்துள்ள பிரமாண்ட படம் சர்வம். இந்தப் படத்தில் ஆர்யா- த்ரிஷா ஜோடியாக நடித்துள்ளனர். விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படத்தின் ஆடியோ வெளியீட்டை வித்தியாசமாக நடத்தினர் அய்ங்கரன் நிறுவனத்தினர்.
சென்னை சிட்டி சென்டர் வளாகத்துக்கு வந்திருந்த பொதுமக்கள் மத்தியில் திடீரென்று நட்சத்திரங்கள் தோன்றி ஆடியோவை ரிலீஸ் செய்வது போல ஏற்பாடு செய்திருந்தனர்.
திடீரென்று ஆரியா, திரிஷா, விஷ்ணுவர்தன், யுவன்ஷங்கர் ராஜா போன்றோர் தோன்றியதால் நிறைய கூட்டம் சேர்ந்துவிட, மக்கள் மத்தியிலேயே, இந்த படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன.
இந்தப் படம் குறித்து பேசிய இயக்குநர் விஷ்ணுவர்தன், நல்ல பொழுது போக்குப் படமாக, ரசிக்கும் விதத்தில் வந்துள்ளது சர்வம் என்றார்.
ஆர்யா பேசுகையில், நான் கடவுள் படத்தின் பாத்திரத்திலிருந்து முழுவதுமாக விலகி நடித்துள்ள வித்தியாசமான டம் என்றார்.
த்ரிஷா அதிரடி!...
பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் திரிஷா. அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்:
ஐ.பி.எல். போட்டியில் (20 ஓவர் கிரிக்கெட் அணி) நட்சத்திர தூதராக போவீர்களா?
த்ரிஷா: ஐபிஎல் தூதராவது ஒரு கெளரவமான விஷயம். ஆனால் இதுவரை எனக்கு அழைப்பு எதுவும் வரவில்லை.
பிரீத்தி ஜிந்தா 20 ஓவர் கிரிக்கெட் அணியை வாங்கியது போல, நீங்களும் வாங்குவீர்களா?
த்ரிஷா: அய்யோ... என்னை சிக்கலில் மாட்டிவிடப் பார்க்கிறீர்கள். சான்ஸே இல்ல... என் பணம் பேங்க்ல பத்திரமா இருக்கு. அது அப்படியே இருக்கும்!
காதலர் தினம்... உங்க அனுபவத்தைக் கூறுங்கள்...
த்ரிஷா: எனக்கு இன்னும் சொல்லிக்கிற மாதிரி இதுல அனுபவம் இல்லை. பொதுவா, நல்ல... உண்மையான காதலர்களுக்கு எல்லா நாளும் வாலன்டைன்ஸ் டேதான். நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன. அவங்கவங்க சாப்பாடு, தண்ணி கூட இல்லாம கஷ்டப்பட்டுக்கிட்டிருக்காங்க. இதுல காதலர் தினத்தை வேறு தனியா கொண்டாடனுமா... இதில் மக்கள் கோபத்தைத்தான் கிளறும். என்னைப் பொறுத்தவரை காதலர் தினமெல்லாம் வீணான வேலைதான்...!" என்றார் த்ரிஷா.
கேட்க நல்ல இதமா இருக்கும், பெற்றோர் காதுகளுக்கு!


Click it and Unblock the Notifications











