கிளாமர் கோதாவில் விஜயலட்சுமி!

கிளாமர் உடைக்கு மாறிய பிறகுதான் தன்னை முழுமையான நடிகையாகவே திரையுலகம் ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறுகிறார் புதிய ஞானம் பெற்ற விஜி.
சென்னை-28, அஞ்சாதே என இரண்டு சூப்பர் ஹிட் படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தாலும், பெரிய வாய்ப்புகள் ஏதுமின்றி வீட்டில்தானிருந்தார் இயக்குநர் அகத்தியனின் மகளான, சுத்த தமிழச்சி விஜயலட்சுமி.
ஆனால் சினிமாவில் நிலைக்க தமிழச்சி என்ற அடையாளம் மட்டும் போதாது. அதெல்லாம் மேடை முழக்கத்துக்கு மட்டுமே சரிப்படும் என்பதை சற்றே தாமதமாகப் புரிந்து கொண்டார்.
தானும் இந்தத் துறையில் நிலைக்க வேண்டுமென்றால் கவர்ச்சி ஆயுதத்தை கையிலெடுத்தே தீர வேண்டும் என்ற தீர்மானத்துடன் அதிரடியாக ஒரு ஆல்பம் தயாரித்து அனுப்ப, இப்போது வாய்ப்புகள் குவிகின்றன.
'அதே நேரம் அதே இடம்' படத்திலும், இன்னும் இரண்டு பெயரிடப்படாத படங்களிலும் தனி ஹீரோயினாகவே நடிக்கிறாராம் விஜி.


Click it and Unblock the Notifications











