தொகுக்கப் போய் விட்ட சாயா சிங்

By Sudha

Chaya Singh
எப்படியெல்லாமோ நடித்துப் பார்த்தும் தமிழிலும், தெலுங்கிலும் ஒன்றும் தேறாததால் அப்செட்டாகிப் போன சாயா சிங்இப்போது ஜூம் டிவியில் தொகுப்பாளினியாக மாறியுள்ளார்.

அழகான நடிகைகளில் சாயா சிங்கும் ஒருவர். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதைத் திருடிய இவர் சினிமாவில் பெரிய இடத்துக்கு வருவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ராசியோ என்னவோ ஸ்டார் நடிகையாக மாறத் தவறினார் சாயா.

சிற்சில படங்களில் நடித்த அவர் குத்துப் பாட்டிலும் தலையைக் காட்டிப் பார்த்தார். பலன் தரவில்லை. சமீபத்தில் வெளியான ஆனந்தபுரத்து வீடு படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஹீரோயினாக நடித்துள்ளார் சாயா. படத்திற்கு நல்ல மாதிரியான வரவேற்பு கிடைத்து வருவதால் குஷியாகியுள்ளார் சாயா.

இருப்பினும் ஜூம் டிவியில் தொகுப்பாளினியாக அவர் புக் ஆகியுள்ளார். ஜூம் டிவி ஒரு வங்காளப் படம் தயாரித்தது. அதில் நடித்தார் சாயா சிங். அப்போது ஏற்பட்ட நட்பில் தொகுப்பாளினியாக சாயா சிங்கை வளைத்துப் போட்டு விட்டனராம்.

இருப்பினும் தொடர்ந்து சினிமாவிலும் நடிப்பாராம் சாயா. இதற்காக தமிழ்ப் இயக்குநர்கள் சிலரிடம் கதையும் கேட்டு வைத்துள்ளாராம். தனக்குப் பொருத்தமான கதையைத்தேர்வு செய்து நடிக்கப் போவதாக கூறியுள்ளார் சாயா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X