மங்காத்தாவில் இணைந்தார் அஞ்சலி

By Sudha

மங்காத்தா படக் குழுவில் புதிதாக அஞ்சலியும் இணைந்துள்ளார். சிறிய ரோரில் அஞ்சலியை நடிக்க வைத்துள்ளார்களாம்.

அஜீத், திரிஷா ஜோடியாக நடிக்கும் படம் மங்காத்தா. இது அஜீத்தின் 50வது படம். வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்தில் பெரும் நட்சத்திரக் கூட்டமே நடிக்கிறது.

அர்ஜூன் முக்கிய வேடத்தில் வருகிறார். லட்சுமி ராய் படத்தில் இருக்கிறார். காமெடிக்கு பிரேம்ஜி அமரன்.

இந்த நிலையில் தற்போது அஞ்சலியும் படத்தில் இணைந்துள்ளாராம். சிறிய ரோலில் அவர் நடிக்கிறாராம். அங்காடித் தெரு படத்திற்குப் பிறகு பெரிதாக பேசப்பட்டவர் அஞ்சலி. ஆனாலும், அவருக்கு தொடர்ந்து முன்னேற வாய்ப்பில்லாமல் போய் விட்டது. பின்னால் வந்த அமலா பால், ஓவியா ஆகியோரெல்லாம் பேசப்படும், பெரிய இடத்திற்குப் போய்க் கொண்டிருக்கும் நிலையில், அஞ்சலி இன்னும் பின்னாடியே இருக்கிறார்.

இந்த நிலையில் தன்னைத் தேடி வந்துள்ள மங்காத்தா பட வாய்ப்பை சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டுள்ளாராம் அஞ்சலி. மங்காத்தாவில் வைபவ் ஜோடியாக வருகிறாராம் அஞ்சலி.

இதுகுரித்து அவர் கூறுகையில், அஜீத் படமாச்சே அதான் உடனே ஒப்புக் கொண்டுவிட்டேன். அவருடன் நடிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அங்காடி தெருவில் நெல்லை தமிழ் பேசினேன். அதற்காக பிரத்யேகமாக நெல்லைக்காரர்களிடம் பயிற்சி எடுத்தேன். தற்போது தூங்காநகரத்தில் மதுரை தமிழ் பேசுகிறேன். ஆனால் இதற்காக நான் யாரிடமும் பயிற்சி எடுக்காமலேயே பேசுகிறேன். இனி நல்ல கதை உள்ள படங்களில் மட்டும் தான் நடிப்பேன் என்றார்.

இப்படத்தில் அஞ்சலிக்கு வாய்ப்பு கிடைத்த சற்று சுவையானது. அதாவது, மங்காத்தா படத்தைத் தயாரிப்பது தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் மூவிஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் இன்னொரு படம்தான் தூங்கா நகரம். இதன் நாயகி அஞ்சலி. அதில் கிடைத்த அறிமுகத்தை வைத்துதான் இப்போது மங்காத்தாவிலும் அஞ்சலியை உள்ளே தள்ளியுள்ளதாக கூறப்படுகிறது.

எப்படியோ நல்லாருந்தா சரி!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X