'லக்ஸ்' அம்பாசடர் ஆனார் ஆசின்!

ஓடியது இந்தியில் ஒரே படம்தான். இருந்தாலும் ஆசினுக்கும் இந்தியில் கிராக்கி உள்ளது. இப்போது சினிமாவை விட விளம்பரங்களில் நிறைய நடித்துக் கொண்டிருக்கிறார் ஆசின். அந்த வகையில் தற்போது லக்ஸ் விளம்பரத்துக்கான பிராண்ட் அம்பாசடராக மாறியுள்ளார் ஆசின்.
இதற்கு முன்பு ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, காத்ரீனா கைப் ஆகியோர் லக்ஸ் சோப் விளம்பரங்களில் நடித்துள்ளனர். இந்த வரிசையில் இப்போது லக்ஸ் ஆசின் கைக்கு வந்துள்ளது.
ஏற்கனவே மிரின்டா, பிக் பஜார், டாடா ஸ்கை, கிளினிக் ஆல் க்ளியர், பேரெவர் பேர்னஸ் கிரீம் என ஏகப்பட்ட விளம்பங்களில் நடித்துள்ளார் ஆசின்.
பாலிவுட்டில் பிரபல இயக்குநர்கள், தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பதற்கு இணையாக லக்ஸ் விளம்பரங்களில் நடிக்க நடிகைகள் ஆசைப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சோப் போடுவதென்றால் யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்கும்!


Click it and Unblock the Notifications











