'ரெடி'க்குப் பின்?.. கவலையில் ஆசின்!

கிட்டத்தட்ட ஆசினின் பாலிவுட் தேனிலவு முடிவுக்கு வந்து விட்டதாக கூறுகிறார்கள். கஜினி மூலம் பெரும் அலைகளை ஏற்படுத்தினார் ஆசின். ஆனால் சல்மான் கானுடன் சேர்ந்து நடித்த லண்டன் ட்ரீம்ஸ் அவரது கனவுகளைக் கலைத்து போண்டியாக்கி விட்டது.
இதனால் அவரது இந்தி பிரவேசம் பாதியிலேயே அவுட் ஆகும் அளவுக்குப் போனது. இந்த நிலையில் மீண்டும் சல்மான் கானுடன் ரெடி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது இந்தியில் வாழ்வா சாவா போராட்டம் போல மாறிப் போயுள்ளது ஆசினுக்கு.
இந்தப் படம் ஓடினால்தான் அவரது இந்தி மார்க்கெட் ஸ்திரப்படும். இல்லாவிட்டால் ராசியில்லாத நடிகையாக்கி விடுவார்கள். தற்போது ஆசின் வசம் புதிய இந்திப் படம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
இதனால் மீண்டும் முழு நேர தென்னிந்திய நடிகையாகி விடும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது. இதை மனதில் வைத்துத்தான் விஜய்யுடன் காவல் காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார் ஆசின்.
ரெடி, காவல்காதல் இதில் எது பிக்கப் ஆகி பெரிதாக ஓடுகிறதோ அந்த பீல்டுக்கே அதிக கவனம் கொடுக்க அவர் தீர்மானித்திருப்பதாக தெரிகிறது.
ரொம்ப வெவரம்தான்!


Click it and Unblock the Notifications











