நமீதாவின் 'ஃபயர்'

ஆக்ஷனும், கவர்ச்சியும் கலந்த அதிரடி மசாலாப் படமாக இது உருவாகப் போகிறதாம். படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பவர் நமீதா. படத்தை அப்துல்லா இயக்க, கரீமுன்னிசா தயாரிக்கிறார்.
இப்படம் குறித்து அப்துல்லா கூறுகையில், நமீதாவை நாயகியாகப் போட்டு ஃபயர் படத்தை உருவாக்கப் போகிறேன். நமீதாவுக்கு இதில் முக்கியமான ரோல். இதுவரை பார்த்திராத நமீதாவை இதில் காணலாம்.
படத்தில் சண்டைக் காட்சிகள் பிரமாண்டமாக எடுக்கப்படவுள்ளன. முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு ஹாங்காங்கிலும், ஆஸ்திரேலியாவிலும் நடைபெறவுள்ளது. படத்தில் மேலும் ஒரு ஹீரோயின் இருக்கிறார். அதேபோல 2 நாயகர்களும் படத்தில் நடிக்கின்றனர். ஆனாலும் நமீதாவுக்கே முக்கியத்துவம் அதிகம்.
கவர்ச்சி, ஆக்ஷன், நமீதா- நினைத்துப் பார்க்கவே திகிலாக இருக்கிறதே...!
More from Filmibeat
actress namitha தெலுங்கு படத்தில் நமீதா நடிகை நமீதா பயர் திரைப்படம் namitha acts in telugu movie fire telugu cinema


Click it and Unblock the Notifications











