பின்னணி பாடகரை மணக்கிறார் நடிகை சங்கீதா!

By Staff

Sangeetha with Krish
நடிகை ரசிகா என்ற சங்கீதாவுக்கும், பின்னணி பாடகர் கிரிஷுக்கும் பிப்ரவரி மாதம் 1ம தேதி திருவண்ணாமலை கோவிலில் திருமணம் நடக்கிறது.

கோ.பாக்யராஜின் கபடி கபடி' படத்தில் பாண்டியராஜனுக்கு ஞோடியாக அறிமுகமானவர் சங்கீதா.

பிதாமகன், உயிர், தனம் உள்பட பல தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். ஏராளமான தெலுங்கு படங்களிலும் சங்கீதா நடித்திருக்கிறார்.

இவருக்கும், பின்னணி பாடகர் கிரிஷுக்கும் காதல் ஏற்பட்டது. உன்னாலே உன்னாலே....' என்ற பாடலை பாடியவர் இந்த கிரிஷ்.

இந்த காதலுக்கு கிரிஷ் குடும்பத்தினர் முதலில் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதைத்தொடர்ந்து, சங்கீதாவும், கிரிஷும் திருப்பதி சென்று ரகசிய திருமணம் செய்துகொண்டதாக கூறப்பட்டது. ஆனால், இந்த தகவலை சங்கீதா மறுத்தார்.

சங்கீதா-கிரிஷ் காதலை 2 பேர் குடும்பத்தினரும் இப்போது ஏற்றுக் கொண்டார்கள். அதைத் தொடர்ந்து இருவருக்கும் முறைப்படி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.

இந்த திருமணம் வருகிற பிப்ரவரி மாதம் 1ம் தேதி காலை 9 மணிக்கு திருவண்ணாமலை கோவிலில் நடக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X