என் கண்ணில் கோளாறு-ஸ்ருதி ஹாசன்

கண்ணாடி போட்டுக் கொண்டும், கான்டாக்ட் லென்ஸ் உதவியுடனும் சமாளித்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளதாவது...
கண்ணாடி இல்லாவிட்டால் நான் 90 சதவீதம் பார்வையில்லாதவள் போலத்தான். சில சென்டிமீட்டர் தொலைவில் உள்ளதைக் கூட என்னால் பார்க்க முடியாது.
இந்தப் பிரச்சினை காரணமாக நான் தெரிந்தவர்களைக் கூட கண்டும் காணாதது போல போய் விட நேரிடுகிறது. நேற்று கூட வாழ்த்து தெரிவிக்க வேண்டியவரை விட்டு விட்டு இன்னொருவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். அதேபோலே கண்ணாடி கதவை நோக்கி நடந்து போய் பின்னர் சுதாரித்துத் திரும்பினேன். எல்லாமே பெரும் மங்கலாக தெரிகிறது. இது சரியில்லை என்று புரிகறது.
இருந்தாலும் கான்டாக்ட் லென்ஸும், கண்ணாடிகளும் இருக்கும் வரை எனக்குப் பிரச்சினை இல்லை. எனவே அவற்றை வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார் ஸ்ருதி.


Click it and Unblock the Notifications











