'அங்காடித் தெரு' அஞ்சலி

By Staff

Anjali
கற்றது தமிழ் பட நாயகி அஞ்சலிக்கு அடுத்த படம் கிடைத்து விட்டது. இந்த முறை வசந்தபாலனின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் அஞ்சலி.

தெலுங்குப் பெண்ணான அஞ்சலி, நடித்த முதல் படம் கற்றது தமிழ். இந்தப் படத்தின் மூலம் அவரும் நன்றாகவே தமிழ் கற்றுக் கொண்டு விட்டார். இப்போது அடுத்த படத்திற்கும் தயாராகி விட்டார்.

வசந்தபாலன் இயக்கும் 2வது படம்தான் அங்காடித் தெரு. அதில்தான் அஞ்சலி நாயகியாக நடிக்கவுள்ளார்.

முதல் படமான வெயில் வித்தியாசமான கதை. வாழ்க்கையில் தோற்ற ஒருவனின் கதையை அதில் சொல்லியிருந்தார் வசந்தபாலன். இந்த முறை, அடித்தட்டு மக்களின் நிலையை தனது கதைக் களமாக கையில் எடுத்துள்ளார் வசந்தபாலன்.

இதுவரை இந்த மக்களின் வாழ்க்கையை சினிமாக்காரர்கள் சரிவர திரும்பிப் பார்க்கவில்லை. படங்களும் அதிக அளவில் வந்ததில்லை. எனவேதான் இந்த மக்களின் கதையை விலாவாரியாக சொல்லப் போகிறேன். அதுதான் அங்காடித் தெரு என்கிறார் வசந்தபாலன்.

இப்படத்தின் நயாகனாக திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியைச் சேர்ந்த மகேஷ் என்பவர் நடிக்கிறார். இவர் ஒரு வாலிபால் வீரராம். மிகக் கடுமையாக தேடிப் பிடித்து மகேஷை நாயகனாக்கியுள்ளனர்.

ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். வழக்கம் போல ஜி.வி.பிரகாஷ்குமாரே இப்படத்திலும் இசையமைக்கிறார்.

எனது பாணி எதார்த்த படமாக அங்காடித் தெரு இருக்கும் என்று கூறுகிறார் வசந்தபாலன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X