கோபிசந்த்துடன் காதல் - ஒப்புக் கொண்ட அனுஷ்கா!

இவருக்கும் தெலுங்கு நடிகர் கோபிசந்துக்கும் மலர்ந்துள்ள காதல்தான் இன்று டோலிவுட்டின் ஹாட் டாபிக். ஜெயம்ரவி கதாநாயகனாக அறிமுகமான ஜெயம்' படத்தில் வில்லனான நடித்தவர்தான் இந்த கோபிசந்த். தற்போது தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகன் இவர்.
அனுஷ்காவும், கோபிசந்தும் சவுரியம் என்ற படத்தில் சேர்ந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
இருவரும் விரைவில் திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாக தெலுங்கு திரையுலக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, இப்போதைக்கு வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கிறேன். கோபிசந்துக்கும் எனக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் உள்ளது. கல்யாணம் பற்றியெல்லாம் இப்போது ஒன்றும் சொல்லமாட்டேன் என்று தெரிவித்துள்ளார் அனுஷ்கா.
Comments


Click it and Unblock the Notifications