ஐந்தைக் குறைத்த அஞ்சலி!

சுந்தர்.சியுடன் இவர் நடித்த ஆயுதம் செய்வோம் படத்துக்கு பெயர் கிடைத்தாலும், நல்ல வசூல் கிடைக்கவில்லை.
ஆனால் அஞ்சலிக்கு அதில் பெரிய நஷ்டமெல்லாம் கிடையாது. கைவசம் இன்னும் நான்கு படங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று நம்பிக்கை தரும் அங்காடித் தெரு. வெயில் படம் தந்த வசந்த பாலனின் மூன்றாவது படம்.
'அங்காடி தெரு' வெற்றியை நான் பெரிதும் எதிர்பார்ககிறேன். இந்தப் படத்துக்காக இயக்குநர் வசந்தபாலன் என் எடையை மட்டுமல்ல நிறத்தையும் குறைக்கச் சொன்னார். இதற்காக வெயிலில் நின்று நிறத்தைக் குறைத்ததோடு, ரொம்பக் கஷ்டப்பட்டு ஐந்து கிலோவுக்கு மேல் எடையையும் குறைத்து விட்டேன், என்கிறார் அஞ்சலி.
படப்பிடிப்பு முடியும் தறுவாயில் உள்ளதாம். தெலுங்கிலும் 2 படங்கள் நடிக்கிறாராம் அஞ்சலி.
Comments


Click it and Unblock the Notifications