காயத்ரி மாஸ்டர்!

இதுவரை நடிகையாக, நல்ல டான்ஸராக மட்டுமே அறியப்பட்டு வந்த காயத்ரி ரகுராம், டான்ஸ் மாஸ்டராக அவதாரம் எடுக்கிறார்.
காயத்ரியின் தந்தை ரகுராமும் டான்ஸ் மாஸ்டர், அம்மா கிரிஜா ஒரு டான்ஸர். சித்திக்கள் கலா, பிருந்தா ஆகியோரும் டான்ஸ் மாஸ்டர்கள்.
இந்த வரிசையில் காயத்ரியும் இப்போது மாஸ்டராகிறார். விசில், சார்லி சாப்ளின், பரசுராம் என சில படங்களில் நடித்துள்ள காயத்ரி ரகுராம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடிப்புக்கு குட்பை சொன்னார்.
பின்னர் அமெரிக்கா சென்று டைரக்ஷன் படித்த அவர் மீண்டும் சென்னை திரும்பிய கையோடு திருமணம் செய்து கொண்டார்.
இந் நிலையில் டான்ஸ் மாஸ்டராக அவதாரம எடுத்துள்ளார் காயத்ரி.
இப்போது இரு மலையாளப் படங்களுக்கு டான்ஸ் டைரக்டராக பணியாற்றி வரும் காயத்ரியின் கையில் தெலுங்கில் ஒரு படமும் இருக்கிறது.
தமிழில் முதல் முறையாக ஜெயம்கொண்டான் படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் அமைக்கும் வாய்ப்பு வந்துள்ளதாம்.


Click it and Unblock the Notifications











