ரஜினியுடன் நடிக்க மறுக்கவில்லை-தீபிகா படுகோன்

எந்திரன் படம் குறித்து யாருமே என்னிடம் பேசவில்லை என்பதே உண்மை, என்கிறார் பாலிவுட்டின் கனவுக் கன்னி தீபிகா படுகோன்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
தமிழ், இந்தி, தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகும் ரஜினியின் எந்திரன் - திரோபோ படத்தில் நான் நடிக்க மறுத்ததாகக் கூறப்படுவது தவறு. அதில் கொஞ்சமும் உண்மையில்லை. இந்தப் படம் குறித்து யாருமே என்னிடம் பேசவில்லை. வாய்ப்பு வந்திருந்தால் கண்டிப்பாக நடித்திருப்பேன்.
மற்றபடி எப்போது வாய்ப்பு வந்தாலும் நடிக்க தயாராக உள்ளேன். ஆனால் வேறு எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை, என்கிறார் தீபிகா.
Comments


Click it and Unblock the Notifications