ரஜினிக்கு ஜோடியான இலியானா!!

By Staff

Illiyana
ஒருவரை வேண்டாம் போ! எனத் துரத்திவிட்டு, பிரபலமானதும் அவர் பின்னால் நடையாய் நடப்பது தமிழ் சினிமாவில் பழகிப்போன சமாச்சாரம்!

அதில் லேட்டஸ்ட் வரவு தெலுங்கு தேச கவர்ச்சிப் புயல் இலியானா. ஒரு வழியாக, பெரிய மனது பண்ணி தமிழில் நடிக்க சம்மதித்துள்ளார். அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக!

ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கும் சுல்தான் தி வாரியர் அனிமேஷன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க நீண்ட பேரத்துக்குப் பின் ஒப்புக் கொண்டிருக்கிறார் இலியானா.

ரவிகிருஷ்ணா இயக்கிய கேடிதான் இலியானாவின் முதல் தமிழ் படம். கேடியின் தோல்வி, அவரை கோலிவுட்டின் ராசியில்லா நடிகை பட்டியலில் சேர்த்துவிட, திரும்பிக் கூடப் பார்க்காமல் ஐதராபாத்துக்கு நடையைக் கட்டினார்.

அங்கோ, கோயில் கட்டாத குறையாக அம்மணிக்கு அமோக ஆதரவு கிடைத்துவிட்டது. கடந்த இரு ஆண்டுகளாக த்ரிஷா, நயன்தாராவெல்லாம் எவ்வளவோ போட்டியிட்டும் இலியானா இடத்தைப் பிடிக்க முடியவில்லை. அவ்வளவு ஸ்ட்ராங்!

ரஜினியின் குசேலன் படம் துவங்கப்பட்ட போது அதில் ஒரு வேடத்தில் தோன்ற இலியானாவை வாசு அழைக்க, அவரோ கால்ஷீட் இல்லையென்று கூறிவிட்டார். சிறிய ரோல் என்பதாலேயே அவர் இப்படிச் சொல்லிவிட்டதாகக் கூறப்பட்டது.

இப்போது ரஜினியின் சுல்தான் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். படத்தின் இயக்குநர் சவுந்தர்யாவே நேரடியாக ஐதராபாத்தில் இலியானாவுடன் பேச்சு நடத்தி இந்த டீலை முடித்தாராம்!

ஏற்கெனவே விக்ரம் ஜோடியாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இலியானா கால்ஷீட் கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X